Monday, December 28, 2009

அதிக குளிரால் மீண்டும் உயிர் பெற்றக் குழந்தை!


இஸ்ரேல் நாட்டில் இறந்து விட்ட குழந்தை ஒன்று, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் உயிர் வந்து மீண்டு எழுந்தது.

இந்த சம்பவம் டாக்டர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குழந்தை இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டு, இறந்த குழந்தைகளை வைக்கும் ரெப்ரிஜிரேட்டரில் வைத்து பல மணி நேரத்திற்குப் பின்னர் அந்தக் குழந்தை பிழைத்திருப்பது மருத்துவ அதிசயம் எனலாம்.

அதிக அளவு கூலிங் (குளிர்சாதனப் பெட்டியில் குளிர்ச்சி) காரணமாக அந்தக் குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்திருக்கலாம் என்று கூறிய மருத்துவமனையின் துணை இயக்குனர் மோஷே டேனியல், மருத்துவ அதிசயம் என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.

பொதுவாக உடலின் வெப்பநிலை மிகவும் குறையும் போது, செயலிழக்கங்கள் குறைவதோடு, குறைந்த அளவே ஆக்ஸிஜன தேவைப்படும் என்றும், உடல் சக்தி மீண்டும் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக குளிர் சிகிச்சை முறை (Cold Therapy) என்ற ஒரு சிகிச்சை முறையே உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

எது, எப்படியோ இறந்து விட்டதாகக் கருதிய குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்தால், பெற்றோரின் மகிழ்ச்சிக்கு எல்லையேது?

Sunday, December 27, 2009

நாங்க ஆம்பளைங்க ...... (அப்பிடிதான் )




கணவர்கள் தங்கள் மனைவிகளிடம் கூறும் வார்த்தைகளின் பொருள் உண்மையில்  இதுதான் .....






  சமைக்க நான் ஹெல்ப் பண்ணட்டுமா ....?
"மனதிற்குள்  :- இன்னும் ஏன் சமைக்கல ....?"

இது பத்தி பேசணும்னா ஒரு நாள் ஆகும் டியர்
மனதிற்குள் :_ "எப்பிடி சொன்னாலும் உனக்கு வெளங்காது டைம் தான் வேஸ்ட் ..."
நாம  லேட் பண்ணிடுவோம்னு நினைக்கிறேன்
மனதிற்குள் :_"இப்பிடி சொல்லலைனா வேகமா ஓட்ட விட மாட்ட ..."  ரொம்ப வேலை செஞ்சி உடம்ப கேடுதுக்காத
டியர்...
மனதிற்குள் :_"உன் மூஞ்சிய பாத்து அலுத்து போச்சி... வேலைக்காரி இருந்தா குஷியா இருக்கும்  "  

அப்பிடியா...
மனதிற்குள் :_"எப்போ பேசி முடிப்ப... ?"
ரொம்ப நல்ல படம் இல்ல...
மனதிற்குள் :_"இந்த படத்துல பொண்ணுங்கல்லாம் கண்ணுக்கு குளுர்ச்சியா இருக்காங்க"

இது பொம்பளைங்க வேலை டியர் ...
மனதிற்குள் :_"இது கொஞ்சம் கஷ்டம் "

வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு மா...
மனதிற்குள் :_"என் பழைய லவர் என் ஆபீஸ் அக்கௌன்டன்ட்  கேண்டீன் பொண்ணு உன் தங்கச்சி ச்சே நானும் எத்தனைய  தான் ஞாபகம் வெச்சிக்க முடியும் ...? இதுல உன் பிறந்தநாள் வேறயா ..."
உனக்காக இந்த ரோஜா வாங்கிட்டு வந்தேன் டியர் ...
மனதிற்குள் :_"தெரு முனைல பூ விக்கிற பொண்ணு சூப்பரா இருந்தா அவகிட்ட பேசணும்னா எதாச்சும் வாங்கணும் இல்ல ..."
ஹீ ஹீ ஹீ ......இபிடியே சொல்லிக்கிட்டு போலாம் ஆனா என் அருமை தோழர்கள் வீடு தேடி வந்து வெட்டுவாங்க ...

அண்ணன்கள்ஸ்.... கொவமா இருந்தா என் மண்டைல கொட்றதா நெனச்சி ஒரு ஓட்டு குத்திட்டு திட்றத கமெண்ட்ஸ் ல திட்டிடுங்க மனசுல ஒன்னும் வச்சிக்காதிங்க..... 

Thursday, December 24, 2009

மதிப்பிற்குரிய புத்திசாலிகளுக்கு மட்டும்


 இந்த குறும்படத்தில உங்களுக்கு என்ன புரியுதுன்னு எனக்கும் சொல்லுங்க

Wednesday, December 23, 2009

மிரட்ட வருது தமிழ் படம்


தமிழில் வெளி வந்த படங்களில்
நீங்கள் பார்த்து சலித்த காட்சிகள்,
கேட்டு புளித்த வசனங்கள்,
அடுத்து என்ன நடக்கும்
என நீங்கள்முந்தைய சீனிலேயே சொல்லிவிடும் திருப்பங்கள்
எதுவும் இல்லாமல்
உங்களால் யூகிக்க முடியாத கதையம்சத்துடன்
விரைவில்....
திரையில் கண்டு மிரள வைக்கவிருக்கும்
படத்தின் டிரைலர்...>>>




 இந்த டிரைலரை பாத்துட்டு  இந்த படம் எப்பிடி பட்ட படம்னு... கமென்ட் போடுங்க... உங்கள்ல எத்தன பேரு தமிழ் படங்களின் தீவிர ரசிகர்கள்னு நானும் தெரிஞ்சிக்க எனக்கும் ஒரு வாய்ப்பா இருக்கும். இதுல விஷயம் என்னன்னா... இந்த படத்துல நானும் ஒரு உதவி இயக்குனரா வேலை செஞ்சிருக்கேன்றதுல ரொம்ப பெருமை படறேன். இந்த படத்துல பணி புரிய காரணமா இருந்த அமுதன் சார்,  சஷிகாந்த் சார், இந்த படம் முழுசா வேலை செய்ய காரணமா இருந்த இந்த படத்தின் டயலாக், பாடல்களை எழுதின சந்ரு சார் இவங்களுக்கு ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கேன்றதை சந்தோசமா சொல்லிக்கிறேன்



வாழ்த்து சொல்ல மனசிருக்கவங்க ஓட்டு போட்டு சொன்னா சந்தோஷ படுவேன்

Tuesday, December 22, 2009

மனம் கணக்கும் கணங்கள்




பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மேல் உள்ள பாசத்தில்  அவர்கள்  கொடுக்கும்  இம்சைகளை  கூட  இன்பமாக  எடுத்து  கொள்வார்கள். ஆனால் பிள்ளைகள் அப்படியில்லை, சின்ன சின்ன விசயங்களில் கூட பெற்றோர்  மீது  கோபப்பட்டு அவர்களை பரிதாபத்திற்குரிய பிறவியாக மாற்றி விடுகின்றனர். இந்த குறும்படத்தில் ஒரு அப்பா தன் மகனிடம் குருவியை  காட்டி அது என்னவென கேட்க முதல்முறை பதில் கூறும் மகன் இரண்டாவது முறையிலிருந்து மெல்ல கோபப்பட்டு பின் திட்டி தீர்க்கிறான். அப்பா அமைதியாய் எழுந்து சென்று தன் டைரியை கொண்டுவந்து தர, அதில் மகன் சிறுவனாய் இருக்கும் போது அதே கேள்வியை 21 முறை கேட்டு இருந்ததும், அதற்க்கு சலிக்காமல் 21 முறையும் பதில் அளித்து, தன் மகனின் ஆர்வத்தை ரசித்ததை அந்த டைரியில் எழுதியிருக்க அதை படித்த மகன் தன் தந்தையை அணைத்து கொள்கிறான்.

சத்தம் இல்லாமல், ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் மனதில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கும்   இந்த குறும்படத்தை நிகோஸ் பிளவியோஸ் உடன் திரைக்கதை அமைத்து, கான்ஸ்டன்டைன் இயக்கியிருக்கிறார்.

இந்த குறும்படம் என் மனதை மிகவும் கவர்ந்தது கனக்க வைத்தது  உங்கள் மனதிலும் நிச்சயம் ஒரு பாரத்தை ஏற்றி விட்டு உங்கள் பெற்றோர் மீது உங்களுக்கு உள்ள பாசத்தை மேலும் வளர்க்கும் என நம்புகிறேன் 


புடிச்சிருந்தா  ஓட்டு போடுங்க............. புடிக்கலேன்னா திட்டி கமெண்ட் போடுங்க....  மறுபடியும் எழுத ஊக்கம் குடுங்க..............

Monday, December 21, 2009

சிரிக்கலேன்னா கொன்னுடுவேன்.....


பெப்பெட் ஷோ என்று மேலை நாடுகளில் பிரபலமான பொம்மலாட்டம் நடை பெறுகிறது
அதை  நான் சமீபத்தில் கண்டு தொடர்ந்து சிரித்ததால்... வயிறு வழி வந்து மருத்துவமனை சென்று வந்தேன். உங்களையும் மருத்துவமனை அனுப்பும் முயற்சியில் தமிழாக்கம் செய்துள்ளேன்.... (படிச்சி சிரிக்கலேனா கொன்னுடுவேன் ) இங்க்லீஷ் தெரிஞ்சவங்க பாத்து  சிரிங்க.... தெரியாதவங்க படிச்சி சிரிங்க
தமிழ் மொழிபெயர்ப்பு
செத்துப்போன தீவிரவாதி   அஹ்மத்..................... ..
ஹீரோ ;- குட் ஈவ்னிங் அகமத்
அஹ்மத் ;-குட் ஈவ்னிங் நாத்திகவாதி
ஹீரோ ;- சரி நீ ஒரு தீவிரவாதி (இல்லையா )....?
அஹ்மத் ;-ஆமாம்.....!  நான் ஒரு தீவிரவாதி
ஹீரோ ;- எந்த மாதிரியான தீவிரவாதி..?
அஹ்மத் ;- பயங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கரமான.......  தீவிரவாதி....          பயந்துட்டியா..?
ஹீரோ ;- இல்ல பயப்படல ....
அஹ்மத் ;- பே....... இப்போ..?
ஹீரோ ;- இல்ல பயப்படல ....
அஹ்மத் ;-  பே...பே....  இப்பவாச்சும் பயந்தியா ....?
 ஹீரோ ;-  இல்ல பயப்படல ....
அஹ்மத் ;- காட் டேம் இட் .................. ஹ... ஹ... அதாவது .... அல்லா டேம் இட்............. சைலன்ஸ்................ கொன்னுடுவேன்.........
ஹீரோ ;- அதாவது ...... அகமத்
அஹ்மத் ;- இல்ல இல்ல அஹ்மத்
ஹீரோ ;-  அததானே நானும் சொன்னேன்..
அஹ்மத் :-  இல்ல நீ சொன்னது அகமத் என் பேரு அஹ்மத் ஹ் ஹ் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்............................           சைலன்ஸ்...................... கொன்னுடுவேன்.........
ஹீரோ ;-  எப்பிடி சொல்லறது.....?
அஹ்மத் ;-  என்னது ..?
ஹீரோ ;-  இல்ல .. உன் பெற எப்புடி எழுத்துல  சொல்றது..?
அஹ்மத் ;-  ஓ அதுவா ... அதுவந்து.... ஏ..... சீ....... பிலிம் ...................      சைலன்ஸ்...................... கொன்னுடுவேன்.........
ஹீரோ ;- ஓகே அஹ்மத் நீங்க தீவிரவாதினா ஏதாவதுல ஸ்பெசலிஸ்ட்-ஆ இருப்பீங்கல்ல.....?
 அஹ்மத்  ;-  ஆமா நான் ஒரு தற்கொலை படைவீரன்
ஹீரோ ;- ஓ அப்போ உங்க வேலைய சரியாய் பண்ணிடிங்க இல்லையா.?
அஹ்மத்  ;- என்ன..?
 ஹீரோ ;- பாம் வேடிச்சிட்டீங்கலானு கேட்டேன்..?
அஹ்மத்  ;-இல்லஇன்னும் இல்ல
 ஹீரோ ;-  ஆனா நீங்க செத்துடீங்களே..?
அஹ்மத்  ;- இல்ல நான் இன்னும் சாகல. நான் நல்லாத்தான் இருக்கேன் 
 ஹீரோ ;-  ஆனா நீங்க வெறும் எலும்புகூடாத்தான் இருக்கீங்க
அஹ்மத்  ;- அது சதைல காயம்.            சைலன்ஸ்...................... கொன்னுடுவேன்.........     என் காலுக்கு என்னாச்சு......? (ங்கோத்தா மாதிரியான கெட்டவார்த்தைகள் )என்னாச்சு என் காலுக்கு ?? யேய் என்னபன்ற என் கால... யேய்.... யேய்....என்னபன்ற என் கால.. நிருர்றுருர்றுருர்த்து................ (என்ன தொடராத நிறுத்து) ..... உன்ன கொன்ன்ன்ன்ன்னுடுவேன் ......
 ஹீரோ ;- ஓகே அப்பிடியே இரு நான் சரி பண்ணி விடறேன்
அஹ்மத்  ;- சரி, என்ன பண்றே காத்துல கராத்தே சண்டை போன்ற மாதிரி இருக்கு யேய் இரு.... இரு .. பின்னாடி என்னமோ முட்டுது.... அய்யோ.... கொஞ்சம் தைலம் தேவை படும் போலிருக்கு
 ஹீரோ ;-  இப்பிடியே உக்காருங்க
அஹ்மத்  ;- ஓகே என்னால என் ஆசனத்த அசைக்க முடியல.....
 (பெட்டிக்குள்ளிருந்து வால்ட்டர் ) ;- ஏ முட்டாள் உனக்கு ஆசனமே இல்லடா..
அஹ்மத்  ;- அது வால்ட்டர் தானே ..
 ஹீரோ ;- ஆமா
அஹ்மத்  ;- அந்த ஆளு என்ன ரொம்ப பயமுறுத்துறான்...........   ப்ளீஸ் மறுபடியும் என்ன அவன்கூட அந்த சூட்கஸ்ல அடைக்காதே
 ஹீரோ ;- ஏன்..?
அஹ்மத்  ;- அவன்  வாயு விடறான் ... இவன் காஸ் க்கு முன்னாடி சதம் (உசேன் ) மாஸ்டர் விக்கிற காஸ்  ஒண்ணுமே இல்லன்ற அளவுக்கு இருக்கு .......இது ஒன்னும் காமெடி இல்ல அவன் எங்களை கொன்னுடுவான் போலிருக்கு
 ஹீரோ ;- அதுசரி அஹ்மத் நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்
அஹ்மத்  ;- என்ன
 ஹீரோ ;-  நீ ஏற்கனவே செத்துட்ட...
அஹ்மத்  ;- நிசமா தான் சொல்றியா..?
 ஹீரோ ;- ஆமா
அஹ்மத்  ;- எனக்கு ஜுரம்தான்  இருந்தது
 ஹீரோ ;- நீ நிஜமாவே செத்துட்ட...  
அஹ்மத்  ;- ஒரு நிமிஷம் நான் செத்திருந்தா எனக்கு 72 கன்னிப் பொண்ணுங்க கிடைப்பாங்க (ஏதோ நம்பிக்கைன்னு நினைக்கிறேன் ) நீங்கதான் எனக்கு சொந்தமான கன்னிப் பொண்ணுங்களா..? என்னால நம்ப முடியாது 

 ஹீரோ ;- ஏன் 
  -------------------------------------------------------------------------------------------------------------------------
மீதிய இங்க்லீஷ் தெரிஞ்சவங்க கொஞ்சம் எழுதி குடுங்கய்யா இதுக்கப்புறம் எனக்கும் புரியல உதவி பண்ணினா இங்க்லீசு தெரியாத நாங்களும் சிரிப்போம்
----------------------------------------------------------------------------------------------------------------------------
புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க........ புடிக்கலன்னா திட்டி கமெண்ட் போடுங்க.................

Sunday, December 20, 2009

உள்ளம் கொள்ளை கொள்ளும் வெள்ளை



Sunday, December 13, 2009

வரலாற்றில் இன்று நடந்தவை

இன்று நடந்த வரலாற்று நிகழ்வுகள் :
 

   * 1287 - நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
    * 1542 - இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம் மேரி என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அரசியானாள்.
    * 1819 - அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது.
    * 1884 - இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
    * 1899 - யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
    * 1900 - மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.
    * 1903 - ரைட் சகோதரர்கள் தமது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர்.
    * 1911 - ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
    * 1918 - பின்லாந்தின் மன்னனாக ஜெர்மனியின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவுசெய்யப்பட்டான்.
    * 1939 - நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.
    * 1941 - உக்ரேனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    * 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் தாய்லாந்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
    * 1946 - ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
    * 1962 - நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
    * 1972 - அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.
    * 2003 - சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக றிவித்தார்.
    * 2003 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
    * 2004 - தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.

Saturday, December 12, 2009

என்னையும் ஆட்டத்துக்கு சேத்துக்கங்க


மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
ப்ளாக் உலக பெரியோர்களே.............தாய்மார்களே ...............
எழுதும் ஆசையில் ப்ளாக்இந்த நுழைந்திருக்கிறேன் ..................
என்னையும் உங்களோடு  சேர்த்துக்கொள்ளுமாறு  மிக மிக தாழ்மையுடன் கேட்டுகிறேன் தொடர்ந்து எழுதவும் வளரவும் வாழ்த்துங்கள். எழுதுவதில் பிழை இருந்தால் திட்டவும் நிறை இருந்தால் பாராட்டவும் உங்களுக்கு முழு உரிமையும் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்..............















நன்றி
இப்படிக்கு
சந்தோஷ்- ர