Monday, December 28, 2009

அதிக குளிரால் மீண்டும் உயிர் பெற்றக் குழந்தை!


இஸ்ரேல் நாட்டில் இறந்து விட்ட குழந்தை ஒன்று, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் உயிர் வந்து மீண்டு எழுந்தது.

இந்த சம்பவம் டாக்டர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குழந்தை இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டு, இறந்த குழந்தைகளை வைக்கும் ரெப்ரிஜிரேட்டரில் வைத்து பல மணி நேரத்திற்குப் பின்னர் அந்தக் குழந்தை பிழைத்திருப்பது மருத்துவ அதிசயம் எனலாம்.

அதிக அளவு கூலிங் (குளிர்சாதனப் பெட்டியில் குளிர்ச்சி) காரணமாக அந்தக் குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்திருக்கலாம் என்று கூறிய மருத்துவமனையின் துணை இயக்குனர் மோஷே டேனியல், மருத்துவ அதிசயம் என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.

பொதுவாக உடலின் வெப்பநிலை மிகவும் குறையும் போது, செயலிழக்கங்கள் குறைவதோடு, குறைந்த அளவே ஆக்ஸிஜன தேவைப்படும் என்றும், உடல் சக்தி மீண்டும் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக குளிர் சிகிச்சை முறை (Cold Therapy) என்ற ஒரு சிகிச்சை முறையே உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

எது, எப்படியோ இறந்து விட்டதாகக் கருதிய குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்தால், பெற்றோரின் மகிழ்ச்சிக்கு எல்லையேது?

No comments:

Post a Comment

தேடி புடிச்சி பொறுக்கியெடுத்து போட்டிருக்கேன் அதனால யோசிக்காம ஓட்டு போடுங்க ப்ளீஸ்............