Monday, December 28, 2009

அதிக குளிரால் மீண்டும் உயிர் பெற்றக் குழந்தை!


இஸ்ரேல் நாட்டில் இறந்து விட்ட குழந்தை ஒன்று, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் உயிர் வந்து மீண்டு எழுந்தது.

இந்த சம்பவம் டாக்டர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குழந்தை இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டு, இறந்த குழந்தைகளை வைக்கும் ரெப்ரிஜிரேட்டரில் வைத்து பல மணி நேரத்திற்குப் பின்னர் அந்தக் குழந்தை பிழைத்திருப்பது மருத்துவ அதிசயம் எனலாம்.

அதிக அளவு கூலிங் (குளிர்சாதனப் பெட்டியில் குளிர்ச்சி) காரணமாக அந்தக் குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்திருக்கலாம் என்று கூறிய மருத்துவமனையின் துணை இயக்குனர் மோஷே டேனியல், மருத்துவ அதிசயம் என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.

பொதுவாக உடலின் வெப்பநிலை மிகவும் குறையும் போது, செயலிழக்கங்கள் குறைவதோடு, குறைந்த அளவே ஆக்ஸிஜன தேவைப்படும் என்றும், உடல் சக்தி மீண்டும் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக குளிர் சிகிச்சை முறை (Cold Therapy) என்ற ஒரு சிகிச்சை முறையே உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

எது, எப்படியோ இறந்து விட்டதாகக் கருதிய குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்தால், பெற்றோரின் மகிழ்ச்சிக்கு எல்லையேது?

Sunday, December 27, 2009

நாங்க ஆம்பளைங்க ...... (அப்பிடிதான் )




கணவர்கள் தங்கள் மனைவிகளிடம் கூறும் வார்த்தைகளின் பொருள் உண்மையில்  இதுதான் .....






  சமைக்க நான் ஹெல்ப் பண்ணட்டுமா ....?
"மனதிற்குள்  :- இன்னும் ஏன் சமைக்கல ....?"

இது பத்தி பேசணும்னா ஒரு நாள் ஆகும் டியர்
மனதிற்குள் :_ "எப்பிடி சொன்னாலும் உனக்கு வெளங்காது டைம் தான் வேஸ்ட் ..."
நாம  லேட் பண்ணிடுவோம்னு நினைக்கிறேன்
மனதிற்குள் :_"இப்பிடி சொல்லலைனா வேகமா ஓட்ட விட மாட்ட ..."  ரொம்ப வேலை செஞ்சி உடம்ப கேடுதுக்காத
டியர்...
மனதிற்குள் :_"உன் மூஞ்சிய பாத்து அலுத்து போச்சி... வேலைக்காரி இருந்தா குஷியா இருக்கும்  "  

அப்பிடியா...
மனதிற்குள் :_"எப்போ பேசி முடிப்ப... ?"
ரொம்ப நல்ல படம் இல்ல...
மனதிற்குள் :_"இந்த படத்துல பொண்ணுங்கல்லாம் கண்ணுக்கு குளுர்ச்சியா இருக்காங்க"

இது பொம்பளைங்க வேலை டியர் ...
மனதிற்குள் :_"இது கொஞ்சம் கஷ்டம் "

வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு மா...
மனதிற்குள் :_"என் பழைய லவர் என் ஆபீஸ் அக்கௌன்டன்ட்  கேண்டீன் பொண்ணு உன் தங்கச்சி ச்சே நானும் எத்தனைய  தான் ஞாபகம் வெச்சிக்க முடியும் ...? இதுல உன் பிறந்தநாள் வேறயா ..."
உனக்காக இந்த ரோஜா வாங்கிட்டு வந்தேன் டியர் ...
மனதிற்குள் :_"தெரு முனைல பூ விக்கிற பொண்ணு சூப்பரா இருந்தா அவகிட்ட பேசணும்னா எதாச்சும் வாங்கணும் இல்ல ..."
ஹீ ஹீ ஹீ ......இபிடியே சொல்லிக்கிட்டு போலாம் ஆனா என் அருமை தோழர்கள் வீடு தேடி வந்து வெட்டுவாங்க ...

அண்ணன்கள்ஸ்.... கொவமா இருந்தா என் மண்டைல கொட்றதா நெனச்சி ஒரு ஓட்டு குத்திட்டு திட்றத கமெண்ட்ஸ் ல திட்டிடுங்க மனசுல ஒன்னும் வச்சிக்காதிங்க.....