Tuesday, December 22, 2009

மனம் கணக்கும் கணங்கள்




பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மேல் உள்ள பாசத்தில்  அவர்கள்  கொடுக்கும்  இம்சைகளை  கூட  இன்பமாக  எடுத்து  கொள்வார்கள். ஆனால் பிள்ளைகள் அப்படியில்லை, சின்ன சின்ன விசயங்களில் கூட பெற்றோர்  மீது  கோபப்பட்டு அவர்களை பரிதாபத்திற்குரிய பிறவியாக மாற்றி விடுகின்றனர். இந்த குறும்படத்தில் ஒரு அப்பா தன் மகனிடம் குருவியை  காட்டி அது என்னவென கேட்க முதல்முறை பதில் கூறும் மகன் இரண்டாவது முறையிலிருந்து மெல்ல கோபப்பட்டு பின் திட்டி தீர்க்கிறான். அப்பா அமைதியாய் எழுந்து சென்று தன் டைரியை கொண்டுவந்து தர, அதில் மகன் சிறுவனாய் இருக்கும் போது அதே கேள்வியை 21 முறை கேட்டு இருந்ததும், அதற்க்கு சலிக்காமல் 21 முறையும் பதில் அளித்து, தன் மகனின் ஆர்வத்தை ரசித்ததை அந்த டைரியில் எழுதியிருக்க அதை படித்த மகன் தன் தந்தையை அணைத்து கொள்கிறான்.

சத்தம் இல்லாமல், ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் மனதில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கும்   இந்த குறும்படத்தை நிகோஸ் பிளவியோஸ் உடன் திரைக்கதை அமைத்து, கான்ஸ்டன்டைன் இயக்கியிருக்கிறார்.

இந்த குறும்படம் என் மனதை மிகவும் கவர்ந்தது கனக்க வைத்தது  உங்கள் மனதிலும் நிச்சயம் ஒரு பாரத்தை ஏற்றி விட்டு உங்கள் பெற்றோர் மீது உங்களுக்கு உள்ள பாசத்தை மேலும் வளர்க்கும் என நம்புகிறேன் 


புடிச்சிருந்தா  ஓட்டு போடுங்க............. புடிக்கலேன்னா திட்டி கமெண்ட் போடுங்க....  மறுபடியும் எழுத ஊக்கம் குடுங்க..............

3 comments:

  1. பெற்ரோருக்கு நிகர் யாருன்டு?
    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. படத்தை ஓடவிட்டால் என் computer படுத்துவிடும் . ஆனா விளக்கம் கொடுத்திருந்திங்களே, அதை படித்தவுடன் என் மனதில் படம் ஓடிவிட்டது.

    என் குழந்தையுடன் பேசும் போது, நானும் என் பெற்றோர்களை நினைத்து கொள்வேன். ( நம்மளையே வளத்துட்டாங்க.... )

    ReplyDelete
  3. appakkalidam kovabadum ov oru maganum paarkavendiyathu. super, ennaiye kalanga vachiduchi,kalakkiteenga santhosh

    ReplyDelete

தேடி புடிச்சி பொறுக்கியெடுத்து போட்டிருக்கேன் அதனால யோசிக்காம ஓட்டு போடுங்க ப்ளீஸ்............